சூரியன் போல் மீண்டு வருவேன் -வைரலாகும் ரோஹித்தின் பழைய டுவீட்..!

இந்திய கிரிக்கெட் அணியின்  ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுவரும் 2 வது டெஸ்ட்டில் 83 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்,

லோர்ட்ஸ் மைதானத்தில் சதம் ஒன்று பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தாலும் ரோஹித் இன்றைய ஆட்டமிழப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

ஆனாலும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக வெளிநாட்டு மண்ணில் அதிக பந்துகளுக்கு தாக்குப்பிடித்து இந்தியாவிற்கு மிகச்சிறந்த அத்திவாரத்தை அமைப்பதில் வல்லவராக திகழ்கிறார்.

இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் பழைய ட்வீட் ஒன்றை தற்போது வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் சிறப்பாக ஆடியிருந்தாலும் டெஸ்ட் தொடருக்கு ரோகித் புறக்கணிக்கப்பட்டார்.

அப்போது “நான் சூரியன் போல மீண்டும் எழுந்து வருவேன்” என ஒரு ட்வீட் இட்டிருந்தார் ரோஹித் சர்மா. எந்த இங்கிலாந்து நாட்டில் வைத்து  புறக்கணிக்கப்பட்டாரோ அதே நாட்டில் தற்போது தான் யார் என்று நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் அந்த ட்வீட்டை வைரலாக்கி வருகிறார்கள்.

ரோகித் சர்மா 2018ஆம் ஆண்டு எடுத்த சபதத்தை இப்போது இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அண்மைக்காலமாக மிகச் சிறப்பாகவே நிறைவேற்றி வருகிறார்.

‘சூரியன் போல் மீண்டும் நாளை எழுந்து வரவேன்’ நிதர்சனமான வார்த்தைகள் தான் ???