? பிரேக்கிங் நியூஸ்?
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஐபிஎல் 2022ல் இருந்து வெளியேற்றப்பட்டதை ஐபிஎல் உறுதி செய்துள்ளது.
இதேநேரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) TATA IPL 2022 சீசனின் மீதமுள்ள போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாமுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த சீசனில் KKR க்காக 2 ஆட்டங்களில் விளையாடிய சலாம், கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் போட்டியில் பங்கேற்க மாட்டார். அவருக்குப் பதிலாக டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷித் ராணா தனது அடிப்படை விலையான INR 20 லட்சத்தில் KKR இல் இணைவார்.
அத்தோடு டெல்லி கேபிடல்ஸ் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கோவிட்-19 இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரை டெல்லி மருத்துவக் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
? ஐ.பி.எல்