சென்னையர் இதயத்தை வென்ற சிராஜ்
எப்பவுமே பிறரோட வெற்றியை
நமது வெற்றியாகவும்
பிறரோட மகிழ்ச்சி மற்றும் வலியை நம்மோட வெற்றி மற்றும் வலியாகவும் பார்க்கப் பழகுவது மனதை வளப்படுத்தும் பயிற்சிகள் .
இதன் மூலம்
பொறாமை ( JEALOUSY)
கர்வம் /பெருமை( PRIDE)
அகம்பாவம்( EGO)
சுயத்தை அளவுக்கு மீறி போற்றுதல் (HYPER NARCISSITIC BEHAVIOUR) போன்ற குணங்கள் மனதை செல்லரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
இதை ஆங்கிலத்தில் EMPATHY என்கிறார்கள்
நமது மொழியில் இதை
“எதிராளியின் மனநிலையில் இருந்து அந்த சூழ்நிலையை உணர்தல்” என்று கூறலாம்
நான் முடிந்தவரை ஒவ்வொரு நிகழ்விலும்
இந்த விசயத்தை கடைபிடிக்க முயற்சிக்கிறேன் ( இன்னும் முழு பக்குவம் அடையவில்லை.. முயற்சி மட்டுமே செய்கிறேன் )
ஆயினும் இதனால் பல வாக்குவாதங்களையும்
சண்டை சச்சரவுகளையும்
நிம்மதி இழப்புகளையும் தவிர்க்க முடிகின்றது.
இது ஒரு மனநிலைப்பயிற்சி.
தினமும் இதை தொடர்ந்து கடைபிடித்து
பழகினால் மிகச்சிறப்பான பிரதிபலன் தரும்.
இந்த படத்தில் முகமது சிராஜ் எத்தனை இயற்கையாக மற்றும் அழகாக அஸ்வினின் வெற்றியை கொண்டாடுகிறார் பாருங்கள்..
இன்று அவரிடம் இந்த செயலை கற்று நகர்கிறேன்..
அஸ்வினும் ஆஸ்திரேலியாவில் நட்டுவின் வெற்றியை தனது வெற்றியாக பாவித்து அவருக்கு சிறந்த ஊக்கத்தை அளித்தார்.
அன்று அவர் செய்தது …
இன்று அவருக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது .
கற்றது சில பத்து விசயங்கள் என்றால்
கற்பதற்கு கோடி இருக்கிறது இன்னும்…
கற்றலே வாழ்க்கை..
?
கடினமானது என்று பலரும் ஒதுக்கும் வாழ்க்கையிலும் விடா முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும் என்று காட்டிய அஸ்வின்
நண்பனின்/ சகோதரனின்/ சக தொழில்முனைவோரின் வெற்றியையும் நமது வெற்றியாக பாவிக்க வேண்டும் என்றும்
சக போட்டியாளன் வெற்றி பெற ( சதமடிக்க) அவனுக்கு உறுதுணையாக களத்தில் நிற்க வேண்டும் என்று உணர்த்திய முகமது சிராஜ்
இருவருக்கும் நன்றி
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை