சென்னையிலிருந்து இன்னுமொரு சுழல்ஜாலம்- IPL இல் …!
சென்னை மண்ணிலிருந்து IPL இல் கலக்க இன்னுமொரு புதிய சுழல் பந்து வீச்சாளர் களம் காண வருகிறார்.
மணிமாறன் சித்தார்த்.
சென்னையில் நடைபெற்று வரும் IPL 2021 சீசனுக்கான ஏலத்தில் டெல்லி அணி தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த்தை ஏலத்தில் எடுத்துள்ளது.
அண்மையில் நிறைவுக்கு வந்த சையத் முஷ்டக் அலி கிண்ண இருபதுக்கு இருப்பது தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வெல்ல மணிமாறன் சித்தார்த் மிகமுக்கிய காரணமாக திகழ்ந்தார்.
20 ஓட்டங்களைக் கொடுத்து பரோடா அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் மணிமாறன் சித்தார்த் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை கொல்கொத்தா அணியில் இடம்பெற்றிருந்தாலும் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறை இன்னுமொரு சென்னை மைந்தன் இடம்பெற்றுள்ள டெல்லி அணியில் மணிமாறன் சித்தார்த்தும் இடம்பெற்றுள்ளார்.