சென்னையில் அஷ்வின் ஆட்டம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் போட்டியின் 3 ஆம் நாளான இன்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை முடித்து கொண்டுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மா வின் சதத்தின் உதவியுடன் 329 ஒட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அஷ்வின் சுழலில் சிக்கி தனது முதல் இன்னிங்ஸில் வெறுமனே 134 ஒட்டங்களை பெற்று ஆட்டமிழந்தது. 195 ஒட்டங்களுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியா அஷ்வின் மற்றும் கோஹ்லியின் சிறப்பான துடுப்பாட்டத்தால் 286 ஒட்டங்களை பெற்று ஆட்டமிழந்தது.
அஷ்வின் 106 ஒட்டங்களையும் கோஹ்லி 62 ஒட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.
இங்கிலாந்து அணிக்கு 582 ஒட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.