சென்னை அணியில் அறிமுகமான இலங்கையின் குட்டி மாலிங்க -முதல் போட்டியிலேயே விக்கெட் வேட்டை (வீடியோ இணைப்பு )

சென்னை அணியில் அறிமுகமான இலங்கையின் குட்டி மாலிங்க -முதல் போட்டியிலேயே விக்கெட் வேட்டை  (வீடியோ இணைப்பு )

இலங்கையின் 19 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரண இன்று ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அறிமுகமானார்.

இன்றைய நாளிலே இடம்பெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியில் மதீஷ பத்திரண அறிமுகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

குட்டி மாலிங்க என எல்லோராலும் அழைக்கப்படும்
மதீஷ பத்திரண இன்று வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சுப்மான் கில்லை எல்பிடபிள்யூ முறை மூலமாக ஆட்டமிழக்கச் செய்தார், அதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவை டொப் எட்ஜ் முறை மூலமாக ஆட்டமிழக்கச் செய்தார்.

முதலாவது போட்டியிலேயே அதிகமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் மதீஷவுக்கு மிகச்சிறந்த ஐபிஎல் எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.

தோனி போன்று ஒருவரின் வழிநடத்தலில் அவர் தலைமையின் கீழ் விளையாடக் கிடைத்தமையும் பெரும் பாக்கியம் என்றே பேசப்படுகிறது.

வீடியோ இணைப்பு ?

 

சென்னை அணிக்காக மதீஷ பதீரன்ன முதல் பந்தில் IPL முதல் விக்கெட்டினை வீழ்த்தினார்.

அத்தோடு இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் 2வது விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தார்.

அவரின் அறிமுகப் போட்டியில் 3.1 ஓவர் 25 ஓட்டங்கள் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

You Tube Link ?