சென்னை அணியில் இணையப்போகும் இலங்கையின் இளம் வீரர்கள் இருவர்…!

 

 

 

 

 

 

 

 

அடுத்த மாதம் 9 ம் திகதி ஆரம்பமாகவுள்ள IPL போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணையும் வாய்ப்பு இலங்கையின் 2 இளம் வீரர்களுக்கு கிட்டியுள்ளது.

மகேஷ் தீக்சன, மதீஷா பத்திரன ஆகிய இளம் வீரர்கள் இருவரும் சென்னை அணியுடனான பயிற்சி நடவடிக்கைகளில் இணைந்துகொள்ளுமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை சார்பில் IPL ஏலத்துக்கு 29 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தாலும், இறுதியில் 9 வீரர்களே குறும்பட்டியலில் இடம்பெற்றனர். ஆயினும் ஒருவரையும் IPL அணிகள் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறும்பட்டியலில் இடம்பெற்றிருந்த மகேஷ் தீக்சன இப்போது சென்னை அணி அழைத்துள்ளமை சிறப்பம்சமாகும். மதீஷா பத்திரன இலங்கையின் இளையோர் உலக கிண்ண போட்டிகளில் 2020 ல் பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயிற்சிகளில் இணைந்து கொள்வதற்காக குறித்த இளம் வீரர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர், சென்னை குழாமில் இவர்கள் இணைக்கப்படாவிட்டாலும் மேலதிக வீரர்களாக தமது ஆற்றலை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளமை பெருமைகொள்ளத்தக்கதே .