சென்னை அணியில் விளையாட இலங்கை வீரருக்கு வாய்ப்பு?

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பதினொருவர் குழாமில் இலங்கை வீரர் மஹேஷ் தீக்‌ஷணாவும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடர் நெருங்கிவிட்டதால், அனைத்து அணிகளும் ப்ளேயிங் 11- ஐ இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் சூரத்தில் பயிற்சி மேற்கொண்ட சிஎஸ்கே, தற்போது மும்பைக்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், ‘

“சிஎஸ்கேவுக்கு 2 வழிகள் உண்டு. டெவோன் கான்வேவை ஓப்பனிங் இறக்கினால், மொயீன் அலி, பிராவோ, ஆடம் மில்னே என 4 அயல்நாட்டு வீரர்களை தேர்வு செய்ய முடியும். ஆனால் காவேவை களமிறக்க வேண்டிய கட்டாயம் சிஎஸ்கேவுக்கு இல்லை.சென்னை அணியில் ரொபின் உத்தப்பா சிறந்த ஃபோர்மில் இருக்கிறார்.ஒருவேளை உத்தப்பா – ருதுராஜ் ஓப்பனிங் ஆடினால், ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடம் வெற்றிடமாகும்.”இந்த நிலையில், பெரும்பாலும் இலங்கை வீரர் மஹேஷ் தீக்‌ஷன சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன”. என குறிப்பிட்டார்.”