சென்னை அணி IPL வரலாற்றில் புதிய சாதனை..!

நேற்று இடம்பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான IPL போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக டோனி தலைமையிலான சென்னை அணி புதிய சாதனை படைத்துள்ளது.

IPL போட்டிகளில் இரண்டாவதாக தடுப்பாடி அதிக தடவை வெற்றி பெற்ற சராசரி சென்னை வசமானது. சென்னை அணி 2 வதாக துடுப்பாடி 63.9 சதவீதமான வெற்றிகளை பெற்றுள்ளது.

சென்னை அணிக்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 61.3 சதவீத வெற்றியுடன் காணப்படுகின்றது.