சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் இலங்கையின் இன்னுமொரு மாலிங்க-இளம் வீர்ர்…!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் இலங்கையின் இன்னுமொரு மாலிங்க-இளம் வீர்ர்…!

IPL போட்டிகளில் இலங்கையின் இளம் வீர்ரான மதீஷா பத்திரன இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் ஆடம் மில்னேவுக்குப் பதிலாக மதீஷா பத்திரன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி TATA இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 க்கு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவுக்குப் பதிலாக மதீஷா பத்திரனாவை ஒப்பந்தம் செய்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான CSK இன் முதல் ஆட்டத்தில் மில்னே தொடை தசையில் காயம் அடைந்தார், மேலும் அவர் அணியில் இருந்து விலகினார்.இதனால் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க முடியாதுள்ளது.

அவருக்குப் பதிலாகவே 2020 மற்றும் 2022 இல் இலங்கையின் U19 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளம் மித வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன இணைக்கபட்டுள்ளார்.  அவர் 20 லட்சம் ரூபாய் விலையில் CSK இல் இணையவுள்ளார்.

லசித் மாலிங்கவின் அதே பாணியில் பந்துவீசக்கூடிய ஆற்றல்கொண்ட மதீஷ பத்திரண இறுதியாக இந்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதின் கீழ் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடியிருந்த நிலையில், தற்போது IPL தொடரில் சென்னை அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளமை சிறப்பம்சம்.

இலங்கை அணியின் இளம்வீர்ர் சுழல் பந்துவீச்சாளர் மஹேஷ் தீக்ஷன சென்னை அணியில் விளையாடி வருகின்றார்.

IPL தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது, இன்று மும்மை அணியை சென்னை சந்திக்கிறது.