சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்தாண்டுக்கான IPL போட்டிகளில் சென்னை அணிக்காக மீண்டும் ரெய்னா விளையாடுவார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ரெய்னா சென்னை சீருடையில் பயிற்சிகளில் வெளுத்துவாங்கும் வீடியோவை சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு IPL போட்டிகளில் ரெய்னா சென்னை அணியிலிருந்து விலகியிருந்தார், இது சென்னை அணிக்கு பலத்த பின்னடைவை தோற்றுவித்தது.

இப்படியிருக்க, சென்னை சீருடையில் மீண்டும் ரெய்னாவைக் காண ரசிகர்களை காத்திருக்கின்றனர். IPL போட்டிகள் அடுத்தாண்டு 9 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.