சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி -தோனி தலைமையில் சென்னை அணி அபார வெற்றி !

14வது ஐபிஎல் தொடரின் 8 வது போட்டி சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது ,பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது .

பலம் பொருந்திய துடுப்பாட்ட வீரர்களை கொண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி 106 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்திலேயே தீபக் சஹர் மிகச் சிறப்பாக முன்வரிசை வீரர்களை பதம்பார்த்தமையே பஞ்சாபின்  இந்த சரிவுக்கு காரணமானது. தமிழக வீரரும் தன்னுடைய இரண்டாவது போட்டியில் விளையாடுபவருமான ஷாருக்கான் தனித்து நின்று போராடி 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார் .

இதன் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் 106 ஓட்டங்களை குவித்தது, 107 எனும் இலகுவான வெற்றி இலக்குடன் ஆடிய சென்னையில் சூப்பர் கிங்ஸ் அணி 16 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 109 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது .

இன்றைய வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2 வது இடத்துக்கு முன்னேறியது.

நாளை வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.