சைக்கிள் சண்டே – விளையாட்டுத்துறை அமைச்சின் திட்டம் அறிமுகம்!

சைக்கிள் சண்டே என்று ஒரு புதிய நடைமுறையை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் அறிமுகம் செய்துள்ளது.

ஒவ்வொரு ஞாயிறுகளிலும் காலைவேளையில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கவும் ,தேகாரோக்கியத்தை கவனத்தில் கொண்டும்  இளைஞர் விவகார அமைச்சின் மூலம் சைக்கிள் சண்டே திட்டம் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோட்டே முதல் கொழும்பு வரை சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு வீதியில் முதல் பாதை ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .