சொந்த மண்ணிலேயே சோதனையை சந்திக்கும் இந்தியா !

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வலுவான நிலையை அடைந்திருக்கிறது .

இன்றைய நாள் மதிய போசன ஆட்டம் நிறுத்தப்படும்வரை  இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 355 ஓட்டங்களை பெற்றுள்ளது .

ஆடுகளத்தில் இன்றைய நாளில் முதல் செஷனில் எதுவிதமான விக்கெட்டுகளும் வீழ்த்தப்படவில்லை .

ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அற்புதமான இன்னிங்சை ஆடி வருகின்றனர், இந்திய பந்துவீச்சால் அவர்களை எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது.

சகல பந்துவீச்சாளர் களையும் இலக்குவைத்து இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்கள் சரமாரியான ஓட்டக் குவிப்புகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

ஜோ ரூட் 156 ஓட்டங்களும் ,பென் ஸ்டோக்ஸ் 63 ஓட்டங்கள் பெற்றும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர். மதியபோசனத்துக்கு ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரையில் 119 ஓவர்களை சந்தித்து இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 355 ஓட்டங்களை குவித்தது.