சொந்த மண்ணில் சூரப்புலி யாக சீறிப்பாயும் அஸ்வின் -சாதனை பட்டியல் !
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கிறது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சென்னை தமிழன் அஸ்வினுடைய சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெறவிருக்கிறது .
இந்தியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இந்திய மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சில் அதீத ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
அவருடைய சொந்த மண்ணில் சாதனை பட்டியல் எவ்வாறு இருக்கிறது என்பதை உங்களுக்கு தருகிறோம்.
43 டெஸ்ட் போட்டிகள்
254 விக்கட்கள்
22.80 – சராசரி
21 தடவை 5 விக்கட் பெறுதிகள்
6 தடவை 10 விக்கட் பெறுதிகள்