சோகத்துடன் வெளியேறுகிறது கத்தார் அணி..!

2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.

தற்போது லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியை நடத்தும் கத்தார் அணி, முதல் போட்டியில் ஈக்வடாரிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும்.

இதனை தொடர்ந்து, 2-வது லீக் ஆட்டத்தில் செனக்கல் அணியை எதிர் கொண்ட கத்தார் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

அடுத்ததாக செவ்வாய்கிழமை நெதர்லாந்து அணியை கத்தார் எதிர்கொள்கிறது. எனினும் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் குரூப் ஏ பிரிவு புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்த கத்தார் அணி, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததுடன், உலகக் கோப்பை தொடரிலும் இருந்து வெளியேறி உள்ளது இது கத்தார் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇