சோதனைகளுக்கு மத்தியில் கோலி சாதனை- 10 ஆயிரத்தை எட்டி தொட்டார்..!

சோதனைகளுக்கு மத்தியில் கோலி சாதனை- 10 ஆயிரத்தை எட்டி தொட்டார்..!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி சோதனைகளுக்கு மத்தியில் ஒரு சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் கோலி 44 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

கோலி ஒட்டுமொத்தமான முதல்தர கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் என்ற சாதனையை தனதாக்கியுள்ளார்.

இந்த போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் 95 டெஸ்டில் 7671 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக் கொண்ட இந்த 7671+ ( ஓவல் டெஸ்ட்டில் 50+44) =  7765 ஓட்டங்கள் அடங்கலாக முதல்தர கிரிக்கெட்டில் கோலி 10,000 ஓட்டங்களை பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.