ஜடேஜாவின் இறுதிநேர வானவேடிக்கை சென்னையை காப்பாற்றியது- மீண்டும் ஒரு அசத்தல் வெற்றி சிஎஸ்கே வசம்..!
14வது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற விறுவிறுப்பான நிறைவுக்கு வந்தது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி நேரத்தில் தினேஷ் கார்த்திக், ரானா ஆகியோரது மிகச்சிறந்த துடுப்பாட்ட துணையோடு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தாலும், இடை நடுவில் வருன் சக்கரவர்த்தியின் பந்தில் போல்டானார், அதனைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ரன் அவுட் செய்யப்பட அதன் பின்னர் போட்டி விறுவிறுப்பானது.
கொல்கத்தா அணி வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர், இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா மிகச்சிறப்பாக 19வது ஓவரில் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகளை விளாசினார் .
இறுதியில் இறுதி ஓவரில் 4 ஓட்டங்கள் தேவை என்ற நிலை வந்தது, அந்த நேரத்தில் சுனில் நரைனது முதலாவது பந்தை அடித்த சாம் கரன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இரண்டாவது பந்துவீச்சில் தாகூர் ஓட்டம் பெறவில்லை, மூன்றாவது பந்துவீச்சில் தாகூர் டீப் பைன்லெக் திசையினூடாக தட்டிவிட 3 ஓட்டங்கள் பெறப்பட்டது.
4 வது பந்தில் ஓட்டமில்லை, இறுதியில் ஜடேஜாவும் 5வது பந்து வீச்சில் ஆட்டமிழக்க, இறுதிப் பந்தில் ஒரு ஓட்டம் தேவை என்கின்ற ஒரு விறுவிறுப்பான நிலை வந்தது.
இறுதியில் மிகச் சிறப்பான முறையிலே தீபக் சஹர் ஒரு ஓட்டத்தைப் பெற்று சென்னை அணியினுடைய வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இது சென்னை அணியின் 8 வது வெற்றியாக அமைந்தது.