ஜடேஜா டுவிட்டரில் உருக்கமான பதிவுடன் நன்றி தெரிவிப்பு. (வீடியோ)

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்க்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவுக்கு வந்திருக்கிறது.

2008 இல் இளையோர் உலக கிண்ணம் வென்ற இந்திய அணியில் கோஹ்லிக்கு உதவி தலைவராக செயல்பட்ட ஜடேஜா, 2009 ம் ஆண்டிலேயே சர்வதேச அறிமுகம் மேற்கொண்டார்.

பிப்ரவரி 8 ம் திகதி 2009 ம் ஆண்டில் கொழும்பு , ஆர் பிரேமதாசா மைதானத்தில் ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.
அது தொடர்பில் ஜடேஜா உருக்கமான பதிவை இட்டுள்ளார்.

“ஒரு குழந்தையாக இருந்தபோது, ​​எங்கள் நாட்டிற்காக விளையாடுவது எனது கனவாக இருந்தது, எனது சர்வதேச அறிமுகம் மேற்கொண்டதிலிருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்துப் பார்க்கிறேன் அது நேற்றைய தினம் போலவே இருக்கிறது.

இந்தியாவுக்காக விளையாடுவது என்பது வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு உணர்வு மற்றும் மிகப்பெரிய கௌரவத்துக்குரியது .
அனைவரத்து அன்பிற்கும் நன்றி” என்று ஜடேஜா டுவிட்ட்டரில் பதிந்துள்ளார்.

டோனி, கோஹ்லியை தொடர்ந்து இந்தியாவுக்காக அனைத்துவகைப் போட்டிகளிலும் 50 க்கும் அதிக ஆட்டங்களில் விளையாடிய 3 வது வீரர் ஜடேஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை 51 டெஸ்ட் போட்டிகள்
168 ஒருநாள் போட்டிகள்
50 இருபதுக்கு இருபது போட்டிகளில் ஜடேஜா இதுவரை இந்தியாவுக்க்காக விளையாடியுள்ளார்.

ஜடேஜாவின் வீடியோ பதிவு.