ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முபாரக் நியமனம்..!
இலங்கையில் இடம்பெற்றுவரும் லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இரண்டாம் பருவகால போட்டிகள் வருகிற டிசம்பர் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
டிசம்பர் 5 ம் திகதி ஆரம்பமாகி 24ஆம் திகதிவரை போட்டிகள் இடம்பெறவுள்ளன, 5 அணிகளுக்கிடையிலான இந்த போட்டி தொடரில் நடப்புச் சம்பியனான ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஜெஹான் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜப்னா கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளிலும், 16 T20 போட்டிகளிலும், 40 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் கொண்ட ஜெஹான் முபாரக், ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பலத்தை மேம்படுத்துவதில் பங்காற்றுவார் என நம்பப்படுகிறது.
தமிழ் பேசும் இன்னுமொருவருக்கு ஜப்னா கிங்ஸ் அணி வாய்ப்பு கொடுத்து உள்ளமையை குறிப்பிடக் கூடிய விஷயம், ஏற்கனவே ஜப்னா கிங்ஸ் அணியில் மூன்று தமிழ் பேசுகின்ற வீரர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டு உள்ள நிலையில், இப்போது இன்னுமொரு தமிழ் பேசும் முன்னாள் வீரர் துடுப்பாட்ட பயிற்சியாளராக இணைக்கப்பட்டிருக்கின்றமை சிறப்பம்சமாகும்.
எஸ்.முகுந்தன்