ஜப்னா கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமான ஆட்டமிழப்பு- (வீடியோ இணைப்பு)

ஜப்னா கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமான ஆட்டமிழப்பு- (வீடியோ இணைப்பு)

இலங்கையில் இடம்பெற்றுவரும் லங்கா  பிரிமியர் லீக் போட்டித்தொடரில் இன்று இடம்பெற்ற மிக முக்கியமான குவாலிபயர் ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இறுதி போட்டிக்கு தேர்வாகும முதல் அணியை தேர்வு செய்யும் ஆட்டத்தில்  பானு ராஜபக்ச தலைமையிலான காலி அணியும் திசர பெரரா தலைமையிலான யாழ் அணியும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது, 189 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி பலமான துடுப்பாட்ட வரிசையை கொண்டிருந்தாலும் 64 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை ஜப்னா கிங்ஸ் அணி இழந்தது, காட்மோர் எனப்படும் அவர்களுடைய அதிரடி துடுப்பாட்ட வீரர் இரண்டாவது விக்கெட்டாக நுவான் துஷார பந்துவீச்சில் அபாரமான பிடிப்பு மூலமாக ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்னா கிங்ஸ் அணியின் தோல்விக்கு இவரது ஆட்டமிழப்பு கணிக்கப்படுவதோடு, இதுவே போட்டியின் மிகப்பெரிய Turning point ஆகவும் பேசப்படுகிறது. கேட்மோர்  நிலைத்து நின்றிருப்பார இருந்தால் ஜப்னா கிங்ஸ் அணி போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் சந்தர்பமும் உருவாகியிருக்கும்.

 வீடியோ இணைப்பு ?