ஜமைக்கா டெஸ்ட் – ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி

ஜமைக்கா டெஸ்ட் – ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி

பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பஹாத் ஆலம் 56 ரன்னும், பஹீம் அஷ்ரப் 44 ரன்னும், பாபர் அசாம் 30 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர், சீலஸ் தலா 3 விக்கெட்டும், ரோச் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பிராத்வெயிட் 97 ரன்னிலும், ஹோல்டர் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிதி 4 விக்கெட்டும், அப்பாஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அபித் அலி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். அசார் அலி 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பாபர் அசாம் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பாகிஸ்தான் 124 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபர் அசாம் 58 ரன்னில் அவுட்டானார். ஹசன் அலி 28 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சீலஸ் 5 விக்கெட்டும், ரோச் 3 விக்கெட்டும், ஹோல்டர், கைல் மேயர்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பிராத்வெயிட் 2 ரன், கிரன் பாவெல் 4 ரன், பானெர் 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.

பொறுப்புடன் ஆடிய பிளாக்வுட் அரை சதமடித்து 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கைல் மேயர்ஸ் டக் அவுட்டானார்.

ஆனால் அடுத்து இறங்கிய கீமர் ரோச் நிதானமாக ஆடினார். அவர் பொறுப்புடன் ஆடி ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது சீலஸ்க்கு அளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் சார்பில் ஷஹின் அப்ரிதி 4 விக்கெட், ஹசன் அலி 3 விக்கெட், பஹீம் அஷ்ரப் 2 விக்கெட் வீழ்த்தினர்.

#ABDH