ஜினடின் சிடேனின் பயிற்சியாளர் பதவி நிலைக்கு வரும் அடுத்த பயிற்சியாளர் யார் தெரியுமா-கொண்டாடும் ரசிகர்கள்.! ?

பிரபல கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட் கால்பந்து கழகத்தின் பயிற்சியாளராக திகழ்ந்த பிரான்சின் முன்னாள் நட்சத்திர வீரரான ஜினடின் சிடேன் அண்மையில் பதவி விலகியிருந்தார்.

அவரது பதவி நிலைக்கு யாரை ரியல் மாட்ரிட் நிர்வாகம் நியமிக்கப்போகிறது எனும் கேள்வி ரசிகர்களுக்கு அதிகம் காணப்படுகின்றது.

இந்தநிலையில் 61 வயதான இத்தாலியை சேர்ந்த கார்லோ அன்சலோட்டி நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் பிரிமியர் லீக் கழகமான எவெர்டன் கழகத்தின் முகாமையாளராக இருந்து அந்த அணிக்கு 3 தடவைகள் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்தை வென்று கொடுத்ததுடன், 4 தடவைகள் அந்த அணியை இறுதிப்போட்டிவரை அழைத்துசென்ற ஒரே முகாமையாளர் கார்லோ அன்சலோட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்லோ அன்சலோட்டி 2013 -2015 வரையான காலப்பகுதியில் ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு 2014 ல் அந்த அணிக்கு சாம்பியன் கிண்ணம் வென்று கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

சிலவேளைகளில் இவரால் ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக முடியவில்லை எனின் அன்டோனியோ கொண்டே நியமிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.

அடுத்துவரும் மணித்தியாலங்களில் இதுதொடர்பான அறிவித்தலை நாம் எதிர்பார்க்கலாம்.