ஜிம்பாப்வே தொடரிலிருந்து நட்சத்திர வீரர் ஹசரங்க நீக்கம்…!

ஜிம்பாப்வே தொடரிலிருந்து நட்சத்திர வீரர் ஹசரங்க நீக்கம்…!

கடந்த டிசம்பரில் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணிக்கு கேப்டனாக செயல்படும் தசுன் ஷானக, கொரோனா தொற்று காரணமாக ஜிம்பாப்வே போட்டியில் இருந்து விலகினார்.

குசல் பெரேரா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இரண்டு இலங்கை வீரர்கள் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆயினும் 20 பேர் கொண்ட இலங்கையின் குழாமில் குசல் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், வனிந்து ஹசரங்காவை போட்டியில் இருந்து நீக்க இலங்கை தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அணி விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று அல்லது நாளை அணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகின்றது.