ஜெகதீசன் & தமிழ்நாடு அணியால் படைக்கப்பட்ட உலக சாதனைகள் விபரம்…!

திங்களன்று விஜய் ஹசாரே டிராபி 2022 இல் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான தனது இன்னிங்ஸின் போது தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் பல சாதனைகளை முறியடித்தார்.

ஜெகதீசனும், சாய் சுதர்சனும் இணைந்து 416 ரன்களில் தொடக்க விக்கெட் இணைப்பாட்டத்தை ஏற்படுத்த, தமிழகம் 50 ஓவரில் 506 ரன்களுக்கு மகத்தான ஸ்கோரை எட்டியது.

சாய் சுதர்சன் 102 பந்துகளில் 154 ஓட்டங்களையும், நாராயண் ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ஓட்டங்களையும் பெற்று வரலாறு படைத்தனர்.

தமிழ்நாடு இன்னிங்ஸின் போது முறியடிக்கப்பட்ட லிஸ்ட் A சாதனைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

5 – நாராயண் ஜெகதீசன் தொடர்ச்சியாக ஐந்து லிஸ்ட் A இன்னிங்ஸில் ஐந்து சதங்களை அடித்துள்ளார். (List A போட்டிகள் என்பது சர்வதேச ஒருநாள் போட்டிகள் அடங்கலாக மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் ஆட்டங்களாகும்)

தொடர்ச்சியான லிஸ்ட் A இன்னிங்ஸில் சதம்:

5- நாராயண் ஜெகதீசன் – 2022 விஜய் ஹசாரே டிராபி

4-குமார் சங்கக்கார – 2015 உலகக் கோப்பை

4-அல்விரோ பீட்டர்சன் – 2015

4-தேவ்தத் படிக்கல் – 2021 விஜய் ஹசாரே டிராபி

விஜய் ஹசாரே டிராபி 2022ல் ஆந்திரா, சத்தீஸ்கர், கோவா, ஹரியானா மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக முறையே 114*(112), 107(113), 168(140), 128(123) மற்றும் 277(141) என்ற கணக்கில் ஜெகதீசன் ஓட்டங்களை குவித்தார்.

5 – விஜய் ஹசாரே டிராபியின் ஒரே பதிப்பில் 5 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் ஆனார்  ஜெகதீசன்.

ஒரே விஜய் ஹசாரே டிராபி பதிப்பில் அதிக சதங்கள்:
நாராயண் ஜெகதீசன் – 2022 இல் 5
விராட் கோலி – 2009ல் 4
தேவ்தத் படிக்கல் – 2021 இல் 4
பிருத்வி ஷா – 2021 இல் 4
ருதுராஜ் கெய்க்வாட் – 2021 இல் 4

15 – விஜய் ஹசாரே டிராபி இன்னிங்ஸில் 15 சிக்ஸர்களை விளாசிய முதல் பேட்ஸ்மேன் ஆனார் நாராயண் ஜெகதீசன். முன்னதாக, 2019ல் ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 சிக்சர்களை அடித்து சாதனை படைத்திருந்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

விஜய் ஹசாரே டிராபி இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்:

நாராயண் ஜெகதீசன் – 15 vs அருணாச்சல பிரதேசம், 2022

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 12 vs ஜார்கண்ட், 2019

விஷ்ணு வினோத் – 11 vs சத்தீஸ்கர், 2019

இஷான் கிஷன் – 11 vs மத்தியப் பிரதேசம், 2021

154 – லிஸ்ட் A கிரிக்கெட்டில் சாய் சுதர்சன் தனது அதிகபட்ச ஸ்கோரை (154) பதிவு செய்தார். அவர் லிஸ்ட் Aகிரிக்கெட்டில் 3 சதங்களை அடித்துள்ளார், அவை அனைத்தும் விஜய் ஹசாரே டிராபி 2022 இல் அடிக்கப்பட்டவையாகும்.

2022 விஜய் ஹசாரே டிராபியில் சாய் சுதர்சன் சதம்:

121(109) vs சத்தீஸ்கர்
117(112) vs கோவா
154(102) vs அருணாச்சல பிரதேசம்

277 – லிஸ்ட் A கிரிக்கெட் வரலாற்றில் நாராயண் ஜெகதீசன் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.

லிஸ்ட் A கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர்:

நாராயண் ஜெகதீசன் (தமிழ்நாடு) – 277 எதிராக அருணாச்சல பிரதேசம் பெங்களூரில், 2022

அலி பிரவுன் (சர்ரே) – 268 எதிராக கிளாமோர்கன், தி ஓவல், 2002

ரோஹித் ஷர்மா (IND) – 264 vs இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில், 2014

டி’ஆர்சி ஷார்ட் (WA) – 257 vs குயின்ஸ்லாந்து சிட்னியில், 2018

ஷிகர் தவான் (IND-A) – 248 vs தென்னாப்பிரிக்கா-A பிரிட்டோரியாவில், 2013

416 – நாராயண் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் தற்போது லிஸ்ட் A கிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப் (416) பெற்றவர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

435 – தமிழ்நாடு 435 ரன்கள் வித்தியாசத்தில் அருணாச்சல பிரதேசத்தை தோற்கடித்தது. லிஸ்ட் A கிரிக்கெட் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய வெற்றி (ரன்கள் மூலம்) ஆகும்.

லிஸ்ட் Aகிரிக்கெட்டில் ரன் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி:

2022 விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு – 435 vs அருஞ்சல பிரதேசம்

சோமர்செட் – 346 vs டெவோன் டார்குவேயில், 1990
க்ளோசெஸ்டர்ஷயர்

விஜய் ஹசாரே டிராபி 2020/21 இல் ஜார்கண்ட் – 324 vs மத்தியப் பிரதேசம்

லிஸ்ட் A கிரிக்கெட்டில் அணிகளின் அதிகபட்ச மொத்த எண்ணிக்கை:

தமிழ்நாடு – 506/2 எதிராக அருணாச்சல பிரதேசம் பெங்களூரு, 2022

இங்கிலாந்து – 498/4 vs நெதர்லாந்து ஆம்ஸ்டெல்வீனில், 2022

சர்ரே – 496/4 vs க்ளௌசெஸ்டர்ஷயர் தி ஓவல், 2007