Happy Birthday Sanath Jayasuriya ❤
1996ம் ஆண்டு இலங்கை உலககோப்பையை ஜெயித்தபிறகு நடந்த சிங்கர் கோப்பை வெகுபிரபலம் இந்தியா பாக்கிஸ்தான் இலங்கை அணிகள் மோதியது.
சிங்கப்பூரில் வைத்து நடைபெற்ற தொடரில் பல உலக சாதனைகள் நடந்தது என சொல்லலாம். மைதானம் சிறியதாக இருந்த காரணத்தினால் பேட்ஸ்மேன்கள் ரன்களை மழை மாதிரி குவித்தார்கள் என்று சொல்வதை விட ஒருவர் மட்டும் குவித்தார் என்றே சொல்லலாம்.
ஜெயசூர்யா உச்சகட்ட பார்மில் இருந்த டைம் அது பந்தை தொட்டாலே பவுண்டரி தான் என்ற நிலைமையில் இருந்தது அவரின் ஆட்டங்கள்.
லீக் போட்டியில் பாக்கிஸ்தான் உடன் 11 four மட்டும் 11 சிக்ஸர்கள் அடித்து உலகசாதனை படைத்திருந்தார் 65 பந்தில் 134 ரன்கள் அடித்தார் . அனைத்து பவுலர்களையும் அலறவிட்டார் வாக்கார் யுனிஸ், சக்லைன் முஸ்டாக் , அக்யுப் ஜாவித் என யாரும் தப்பவில்லை அவரின் அதிரடியில் .
இந்தியா ரன் ரேட் அடிப்படையில் தகுதிபெற முடியாமல் போக பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இறுதிபோட்டியை விளையாண்டது .
அனைவரும் பந்தயம் கட்டியது என்னமோ இலங்கை அணி மீது தான் பாக்கிஸ்தான் 215 ரன்கள் மட்டும் அடிக்க அதை ஊதி தள்ளுவது போல ஆடினார்
பந்துகள் சிக்ஸர்களாகவும் பவுண்டரிகளாகவும் பறக்க ஆரம்பித்தன
முதல் 5 ஒவரிலயே 70 ரன்கள் வந்தாகிவிட்டது அதில் பெரும் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த 70 ரன்னில் ஒரு ரன் கூட ஆப்போசிட் பேட்ஸ்மேன் கலுவித்ரனா எடுக்க வில்லை என்பதே .
அனைத்து ரன்களையும் 90ஸ்களின் ஏலியனான ஜெயசூர்யாவே எடுத்தார்.
அவர் 28 பந்தில் 76 ரன்கள் அடித்து அவுட் ஆக அணி சீட்டுகட்டு போல் சரிந்து 172 ரன்களில் ஆல் அவுட் ஆகி கோப்பையை இழந்தது .
ஆனால் அந்த தொடரில் ஜெயசூர்யா ஏற்படுத்திய தாக்கம் பல ஆண்டுகள் எதிரொலித்தது அவரை மாதிரி அதிரடியாக ஒப்பனிங் ஆடும் பல பேட்ஸ்மேன்களை நிறைய அணிகள் முயற்சி செய்து பார்த்தன அந்த வழி தோன்றவர்களில் வந்தவர்கள் தான் கில்கிறிஸ்ட், மெக்குலம், கெயில் எல்லாம் .
இன்றைய 20 ஒவர்களில் கெயில் வேண்டுமானால் அதிரடி மன்னனாக இருக்கலாம் ஆனால் 90களில் ஜெயசூர்யா பேட்டிங் ஆட வருகிறார் என்றால் ரசிகனுக்கு வாணவேடிக்கை திருவிழாவாகவும் பவுலர்களை கனவில் கூட பயமுறுத்தும் பகவலனாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.
Re Post From #Ayyappan