ஜெரோம் ஜெயரத்னவின் நியமனத்திற்கு ஹரீன் பெனாண்டோ ஆதரவு .

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக அண்மையில் நியமனம் செய்யப்பட்ட ஜெரோம் ஜெயரத்னவின் நியமனத்திற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் .

தற்போதைய நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக செயற்படக் கூடிய ஆற்றலும் வல்லமையும் ஜெரோம் ஜெயரத்னவிற்கு இருப்பதாக தான் நம்புவதாக ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார் .

குறிப்பாக இவரது நியமனத்தின்போது சமூக வலைத்தளங்களில் சில தவறான புரிதல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித்த ராஜபக்சவின் மனைவியின் தந்தையாரே ஜெரோம் ஜெயரத்ன என்பது குறிப்பிடத்தக்கது .

இதனடிப்படையில் ராஜபக்ச குடும்பத்தினருடன் நெருக்கமான உறவை கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ,விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ச ஜெரோம் ஜெயரத்னவை நியமித்திருப்பதாக பரப்பப்படுகின்ற செய்திகளில் உண்மையில்லை என்றும் ,ஜெரோம் ஜெயரத்ன அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.