ஜெர்மனியை வெளியேற்றி காலிறுதிக்கு நுழைந்தது இங்கிலாந்து

ஜெர்மனியை வெளியேற்றி காலிறுதிக்கு நுழைந்தது இங்கிலாந்து

Euro கிண்ணம் 2020 இன் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட Round of 16 போட்டியான இன்றைய போட்டியில் Germany மற்றும் England அணிகள் மோதின.

இரு முன்னணி அணிகளும் மோதிய ஆட்டம் இறுதி 15 நிமிடங்கள் வரை கோல் ஏதும் இல்லமால் சமனிலையை நோக்கி சென்றுகொண்டிருந்தது. எனினும் England அணிக்கு இறுதி நேரத்தில் Sterling மற்றும் Harry Kane அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து வெற்றியை பெற்று கொடுத்தனர். ஆட்ட நேர முடிவில் England 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பல முன்னணி அணிகளின் வெளியேற்றத்தின் தொடர்ச்சியாக அப் பட்டியலில் இன்று ஜெர்மனி உம் இணைந்து கொண்டது. அத்துடன் Group of Death இல் இருந்து தகுதி பெற்ற 3 அணிகளும் Round of 16 உடன் வெளியேறியுள்ளன.

ஜெர்மனி அணியின் Thomas Müller இன்று அருமையான ஒரு கோல் போடும் வாய்ப்பை நழுவ விட்டார். ஜெர்மனிக்காக 198 போட்டிகள் விளையாடியுள்ள Thomas Müller இற்கு இது அனேகமாக இறுதி போட்டியாக அமையவுள்ளது. அத்துடன் அவர் Euro கிண்ண போட்டிகளில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி இன் உலக கிண்ணம் வென்ற பயிற்சியாளரான Joachim Low இப் போட்டியுடன் Germany இன் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

1966 ம் ஆண்டுக்கு பின்னர் முக்கிய கால்பந்து தொடரொன்றில் ஜெர்மன் அணியை இங்கிலாந்து கால்பந்து அணி தோற்கடித்த முதல் சந்தர்பம் இதுவாகும்.