ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் ஜெர்ட் முல்லர் காலமானார்

ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் ஜெர்ட் முல்லர் காலமானார்

ஜெர்மனியை சேர்ந்த கால்பந்து ஜாம்பவானான ஜெர்ட் முல்லர் (வயது 75) காலமானார். இதனையடுத்து,அவரது மறைவிற்கு ஜெர்மனி கால்பந்து ரசிகர்கள்,கால்பந்து நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பேயர்ன் முனிச் கால்பந்து கிளப்பின் தலைவர் ஹெர்பர்ட் ஹைனர் “எஃப்.சி பேயர்ன் மற்றும் அதன் அனைத்து ரசிகர்களுக்கும் இன்று ஒரு சோகமான, இருண்ட நாள். ஜெர்ட் முல்லர் இதுவரை இருந்த மிகச்சிறந்த ஸ்ட்ரைக்கராக இருந்தார், மேலும் உலக கால்பந்தின் சிறந்த குணாதிசயம் கொண்ட நபர். நாம் அனைவரும் அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வோம். ஜெர்ட் முல்லர் இல்லாமல்,இனி நாம் அனைவரும் விரும்பும் கிளப்பாக எப்சி பேயர்ன் இருக்காது. அவருடைய பெயரும் நினைவும் என்றென்றும் நிலைத்து நிற்கும். என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து,எஃப்சி பார்சிலோனா நிர்வாகம் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:

கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த நபர்களில் ஒருவரான ஜெர்ட் முல்லரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களின் மிகவும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளது.

#ABDH