ஜேசன் ராய்க்கு பதிலாக IPL க்கு வரும் ஜெப்னா கிங்ஸ் அணியின் இளம் வீரர் …!
ஆப்கானிஸ்தானின் 20 வயதான நம்பிக்கைக்குரிய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரஹ்மானுல்லா குர்பாஸ், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி ரஹ்மானுல்லா குர்பாசை , இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரருக்கு மாற்றாக ஒப்பந்தம் செய்துள்ளது. ஜேசன் ராய்,உயிர்க் குமிழி (Bio bubble) சோர்வைக் காரணம் காட்டி முழு போட்டியிலிருந்தும் வெளியேறினார்.
ஆப்கானிஸ்தானுக்காக 20 T20I போட்டிகளில், ரஹ்மானுல்லா குர்பாஸ் 26.7 சராசரி மற்றும் 137.63 ஸ்ட்ரைக் ரேட்டில் 534 ரன்கள் எடுத்துள்ளார், அவரது சிறந்த ஸ்கோர் 87 ஆகும்.
குர்பாஸ் இன்னும் ஐபிஎல்லில் விளையாடாவிட்டாலும் உலகெங்கிலும் உள்ள பல ஒயிட்-பால் லீக்களில் அவர் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2022 இல், குர்பாஸ் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடினார்.
அவர் ஆறு ஆட்டங்களில் 27.80 சராசரி மற்றும் 180.51 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 139 ரன்களுடன் தொடரை சிறப்பாக முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகள் 9 ல் விளையாடியுள்ள ரஹ்மானுல்லா குர்பாஸ், 3 சதங்களை விளாசியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ் அணியில் அதிரடி ஆரம்ப வீரராக ஜொலித்தவர் குர்பாஸ் என்பதும் சிறப்பே.