ஜேர்மன் பயிற்சியாளர் பதவி விலகல்…!

ஜேர்மன் பயிற்சியாளர் பதவி விலகல்…!

பிரபலமான ஜேர்மனி கால்பந்து அணியின் பயிற்சியாளராக திகழும் ஜோச்சிம் லோ தனது பதவியிலிருந்து விலகுவதாக ஜேர்மனி கால்பந்து சம்மெளனம் அறிவித்துள்ளது.

2014 ம் ஆண்டு ஜேர்மனி அணி கால்பந்து உலக கிண்ணம் வெற்றிகொண்டபோது அந்த அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக உலக கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஜோச்சிம் லோ என்பது முக்கியமானது.

2004 ம் ஆண்டு உதவி பயிற்சியாளராகவும், 2006 ம் ஆண்டு முதல் தலைமை பயிற்சியாளராகவும் ஜேர்மனி அணியை வழிநடத்திய ஜோச்சிம் லோ, அந்த அணிக்கு உலக கிண்ணம் உள்ளிட்ட பல கிண்ணங்களை கிடைக்க செய்ததுடன் தரவரிசையில் நீணடகாலம் முதலிடத்தில் வைத்திருந்தவராவார்.

யூரோ சாம்பியன் கிண்ணத்தோடு அவரது பதவிக்காலம் நிறைவுக்கு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Previous article90 களின் பசுமை நினைவுகளை மீட்ட சனத்- ஜோண்டி கூட்டணி…! (வீடியோ இணைப்பு)
Next articleடோனி, கோஹ்லியின் சாதனையை ஒரே போட்டியில் தகர்த்த ப்ரித்வி ஷா…!