ஜொன்டி ரோட்ஸை நினைவுபடுத்திய கேஎல் ராகுல் (வீடியோ இணைப்பு)

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபது-20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

போட்டியில் மிக அபாரமான களத்தடுப்பாற்றலை இந்திய வீரர்கள் கேஎல் ராகுல் வெளிப்படுத்தினார்.

கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் ஜொன்டி ரோட்ஸை நினைவுக்குக் கொண்டு வரும் விதமாக இவருடைய களத்தடுப்பு அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது .

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அணித்தலைவராக செயற்பட்ட ராகுல் , அந்த அணிக்கு களத்தடுப்பு பயிற்சி அளிக்க ஜொன்டி ரோட்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதை நேற்றைய போட்டியின் போது ரசிகர்களுக்கு நினைவுபடுத்தி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.