ஒரு நல்ல பேட்ஸ்மேன், எந்த ஒரு மேட்ச்னாலும் சரியா ஆடாமல் போகலாம்; ஆனால், ஒரு நல்ல ஃபீல்டர், எப்பவுமே மேட்ச்சுக்கு 20 to 30 ரன்களை சேவ் பண்ணிடுவான். MS Dhoni The Untold storyல வர இந்த டயலாக், ஜான்டி ரோட்ஸை நினைத்து எழுதப்பட்டதாதான் இருக்கும்.
ஜான்டி பாயிண்ட்ல நிக்கிறார்னா, சச்சின்ல இருந்து, கடைசி டெயில் எண்டர் வரை, அந்தப் பக்கம் அடிக்கப் பயப்படுவாங்க! அதுதான், அவரோட வெற்றி!!!!!
பந்தை, சீட்டா மாதிரிப் பறந்து பிடிப்பதாகாட்டும், கண் இமைக்கும் நேரத்தில், காற்றின் வேகத்தை விட அதிவேகமாகப் பறந்து அடிக்கும் ரன் அவுட்டாகட்டும், பவுலர் பவுலிங்போட ஓடி வரும்போது, இரண்டு கைகளையும் உரசிக் கொண்டே அவுட்டர் சர்க்கிளில் இருந்து நடந்து வரும் அந்தக் கழுகு பார்வையாகட்டும், ஜான்டிக்கு நிகர், ஜான்டியே!!!!!
நீங்கள் வரலாற்றில் யார் சிறந்த பேட்ஸ்மேன்/பவுலர் என்ற கேள்வியை எழுப்பினால், உங்கள் மனதுக்குள் பல வீரர்கள் தோன்றி மறையலாம். ஆனால், ‘சிறந்த பீல்டர் யார்?’, என்ற கேள்வி எழுந்தால், இக்காலத்தில் மட்டும் அல்ல, எக்காலத்திலும் மனதிற்குள் தோன்றும் முதல் பெயர், ஜான்டி, ஜான்டி, ஜான்டி, மட்டுமே!!!!! அதுவே, அவர் ஏற்படுத்திச் சென்ற மாபெரும் சாதனை.
“நீ என்ன பெரிய ஜான்டி ரோட்ஸா??!!”, ஒவ்வொரு டீமிலும் உள்ள சிறந்த ஃபீல்டர்களை, மற்றவர்கள் கேக்கக்கூடிய கேள்வி. அந்தக் கேள்வி, கிரிக்கெட் இருக்கும்வரை கேக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜான்டி ரோட்ஸ்!!!!!
#அய்யப்பன்
27.07.2021