ஜோ ரூட்டின் அபார சதத்தால் உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது!

ஜோ ரூட்டின் அபார சதத்தால் உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது!

முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்டின் அபார சதத்தால் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் நான்காம் நாளான இன்று (05) காலை 277 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை கடந்த இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் புதிய அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த உலகின் 14-வது பேட்ஸ்மேனான ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 115 ரன்களுடன் ஆட்டத்தை முடித்தார்.

ஜோ ரூட் மற்றும் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தனர்.

ஆனால் இந்த இணைப்பில் பென் ஃபோக்ஸ் பங்களிப்பு 32 ரன்கள் மட்டுமே. 277 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து நான்காவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்தது. அப்போது இணைந்த முன்னாள் கேப்டனும் தற்போதைய கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ் ஐந்தாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக களத்தில் நின்ற பென் ஸ்டோக்ஸ் 54 ரன்களில் ஆட்டமிழந்தார், ஆனால் தொடர்ந்து தனது இன்னிங்ஸை தொடர்ந்த ஜோ ரூட் கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரம் களத்தில் நின்று இங்கிலாந்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்தை கைப்பற்றிய ஜோ ரூட், விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் உடன் 120 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார், ஆனால் ரூட் அந்த 120 ரன்களில் 81 ரன்களை சேர்த்தார்.

இன்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து வெற்றிக்கு 61 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. காலையில் சற்று குளிராக இருந்த போதிலும், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட கைல் ஜேமிசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் ஜோ ரூட் மற்றும் பென் ஃபோக்ஸ் எந்த சிரமமும் இல்லாமல் தங்கள் இலக்கை நோக்கி சென்றனர்.

இந்த 115 ரன் ஜோ ரூட்டின் 26வது டெஸ்ட் சதமாகும், ஆனால் ஒரு போட்டியின் நான்காவது இன்னிங்சில் அவர் அடித்தது இதுவே முதல் முறையாகும். அத்தோடு 10,000 ஓட்டங்கள் பெற்ற 14 வது வீர்ராகவும் ரூட் சாதனை புரிந்தார்.

இந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார், அதனால் புதிய தலைவராக ஸ்டோக்ஸ் நியமனம் பெற்றார்்என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

ஸ்கோர் சுருக்கம் ?

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் – 132/10
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் – 141/10
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் – 285/10
இங்கிலாந்து – இரண்டாவது இன்னிங்ஸ் 279/5

கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்திருக்கும் முதலாவது டெஸ்ட் வெற்றியாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது .

புதிய தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட பென் ஸ்டோக்ஸ் கூட்டணி சேர்ந்து இங்கிலாந்தை வெற்றிப் பயணத்திற்கு அழைத்துச் சென்றமை பாராட்டத்தக்கதே.

YouTube காணொளிகளுக்கு ?

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் -ஸ்டோக்ஸ் சாதனை ?

T20 கிரிக்கெட் மட்டுமே பாண்டியா விளையாட வேண்டும் ?

இந்தியாவுக்கு 5,6 ம் இலக்கத்தில் யார் ஆடவேண்டும்- ரவி சாஸ்த்திரி கருத்து ?