ஜோ ரூட்டின் கனவான் தன்மையான செயல் – கிரிக்கட்டில் குவியும் பாராட்டுக்கள் ( வீடியோ இணைப்பு)

இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவர் ஜோ ரூட் சனிக்கிழமையன்று   விளையாட்டுத் திறனைப் பாராட்டக்கூடிய ஒரு கனவான் தன்மையான செயலைக் வெளிப்படுத்தினார்.

இதனால் ஏராளமான யார்க்ஷயர் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் பிரியர்களும் அவர் லங்காஷயர் ஆல்-ரவுண்டர் ஸ்டீவன் கிராஃப்டை ரன் அவுட் செய்யாமல் கனவான் தன்மையுடன் நடந்து கொண்டதற்காக பாராட்டியுள்ளனர்.

ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த டி20  போட்டியில் வெற்றிபெற லங்காஷயர் 128 என்ற இலக்குடன்  துரத்தியது ,எட்டாவது ஓவரில் லங்காஷயர் 64-5 என சரிவை சந்தித்தது.

கிராஃப்ட் (26 *) மற்றும் லூக் வெல்ஸ் (30*) ஆகியோர் மீண்டும் போட்டியை கட்டியெழுப்ப தொடங்கினர், இறுதியில் 15 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது,

அந்த நேரத்தில் கிராஃப்ட் விரைவான ஒற்றை ஓட்டம் பெற முயற்சிக்கும்போது தரையில் மிட் பிட்சில் திடீரென சரிந்து வீழ்ந்தார்.

பேட்ஸ்மேன் வலியால் துடிதுடித்தார்,போட்டியில் ஸ்டாண்ட்-இன் கேப்டன் ரூட்டின் அறிவுறுத்தலின் கீழ், யார்க்ஷயர் அவரை ரன் அவுட் செய்ய விரும்பவில்லை.

தசைப்பிடிப்புக்கான சிகிச்சையின் பின்னர் லங்காஷயர் நான்கு விக்கெட்டுகளால் போட்டியில் வெற்றி பெற்றது.

வீடியோவை இங்கே பாருங்கள்.

 

பின்னர், கிராஃப்ட் ரூட் மற்றும் அவரது அணியினருக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தார், அவர் ரன் அவுட் செய்யப்பட்டிருந்தால் போட்டியை வென்றிருக்க முடியாது என்பது எல்லோருக்கும் புலனானது.

“ஒரு பக்கமாக நாங்கள் அழுத்தத்தின் கீழ் மிகவும் கடினமான முடிவை எடுத்தோம்.  பலவிதமான கருத்துக்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன். பலர் இதை வித்தியாசமாகக் கையாண்டிருப்பார்கள், ”என்று கேப்டன் ஜோ ரூட் போட்டிக்குப் பின்னர் கூறினார்.

ஜோ ரூட்டின் இந்த கனவான் தன்மையான செயல் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

எல்லோருக்கும் இப்படி மனசு வருவதில்லைதானே .