ஜோ ரூட்டை டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் ஆட்டமிழக்கச் செய்த வீரர்கள் யார் தெரியுமா ?
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட் அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய அளவிலான ஓட்டங்களை குவித்து வருகிறார்.
அதுவும் நடப்பு 2021 அவருக்குமான ராசியான ஆண்டாக மாறுகிறது, சாதனை புத்தகத்தில் எல்லாவற்றிலும் தன்னுடைய பெயரை ஆழமாக பதிந்து வருகின்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருடைய பந்துவீச்சில் ரூட் அதிகம் ஆட்டம் இழந்திருக்கிறார் என தேடிப் பார்த்தோம், இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்திய பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ராவும் இந்த பட்டியலில் காணப்படுகின்றார்.
பும்ரா பந்திலேயே 14 இன்னிங்ஸ்களில் ஆறு தடவைகள் ரூட் ஆட்டமிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக ஜோ ரூட்டை அதிக தடவைகள் ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் அவுஸ்திரேலிய வீரர்கள் மூவர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
பெட் கம்மின்ஸ் 19 இன்னிங்ஸ்களில் 7 தடவையும் , ஹெஸ்ஸெல்வூட் 24 இன்னிங்ஸ்களில் 7 தடவையும் , நதன் லயன் 42 இன்னிங்ஸ்களில் 7 தடவையும் ரூட்டை ஆட்டமிழக்க செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.