ஞானம் பெயின்ற்ஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான இறுதி போட்டியில் நல்லூர் சாம்பியன்…!

ஞானம் பெயின்ற்ஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான இறுதி போட்டியில் நல்லூர் சாம்பியன்…!

Gnanam Paints Champions Trophy 2021 தொடரின் இறுதி போட்டி இன்று யாழ் St Patricks மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் Nallur Broncos மற்றும் Jaffna Royals அணிகள் மோதின. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் தரத்திற்கு சற்றும் குறையாமல் இடம்பெற்ற  இப்போட்டியில் Nallur Broncos அணி வெற்றி பெற்று GPCT 2021 இன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய Nallur Broncos அணி 19.4 ஓவர்களில் சகலவிக்கெட்களையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று கொண்டது. துடுப்பாட்டத்தில் உதயகுமார் பிரியலக்ஷன் 22 ஓட்டங்களையும் பூபாலசிங்கம் டர்வீன் 21 ஓட்டங்களையும் ராசரத்தினம் லதுஜன் 16 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.
பந்துவீச்சில் Jaffna Royals சார்பாக ஜிந்துஸன் மற்றும் பிரசன்னா 3 விக்கெட்களையும் சுஜேன் 1 விக்கெட் இனையும் வீழ்த்தினர்.

113 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய Jaffna Royals ஆரம்பத்தில் விரைவாக விக்கெட்களை பறிகொடுத்தாலும் அருண்குமார் மற்றும் பிரசன்னா இன் அதிரடி இணைப்பாட்டத்தின் மூலம் வெற்றி இலக்கை நெருங்கினாலும் இறுதியில் 7 விக்கெட்களை இழந்து 96 ஓட்டங்களை பெற்று 16 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அருண்குமார் 36 ஓட்டங்களையும் பிரசன்னா 20 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தார். பந்து வீச்சில் தவராசா பிரதீப் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களை விட்டு கொடுத்து 1 விக்கெட் இனையும் குகசதுஸ் 2 விக்கெட்களையும் சஜீபராஜ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக பந்துவீச்சு களத்தடுப்பு துடுப்பாட்டம் என சகல துறைகளிலும் ஜொலித்த பூபாலசிங்கம் டர்வின் தெரிவு செய்ய பட்டார்.

இறுதி போட்டியில் வெற்றி பெற்று GPCT 2021 தொடரின் வெற்றியாளரானது Nallur Broncos.

இறுதி போட்டியின் ஆட்ட நாயகன்:
பூபாலசிங்கம் டர்வின்

Winners:
Nallur Broncos

1st Runners Up:
Jaffna Royals

2nd Runners Up:
வடமராட்சி வேங்கைகள் (Vadamaradchi Venghaikal)

3rd Runners Up:
North Conquerors