டக்சன் பியூஸ்லஸ் மரணச்சடங்கை ஒழுங்கமைக்கும் கால்பந்து சம்மேளனம்…!

அன்புள்ள உதைபந்தாட்ட குடும்பத்தினருக்கு,

மறைந்த தேசிய அணி வீரன் பியூஸ்லஸ்ற்கு எமது தலைவர் திரு.ஜஸ்வர் இன்று மன்னார் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததோடு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளார். ?
மாலைதீவிலிருந்து அவரது உடலை இலங்கை கொண்டுவருவதற்கான அனைத்து நடைமுறைகளையும் வெளிவிவகார அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சுக்களுடன் தொடர்புகொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் முடித்துள்ளார். ?
அத்தோடு தேசிய வீரனின் உடல் இலங்கை கொண்டுவருவது முதல் இறுதிகிரிகைகள் முதல் அனைத்து செலவுகளையும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் ஏற்றுக்கொண்டுள்ளதோடு இலங்கையில் சட்ட நடைமுறைகளை முடித்த பின்னர், அவரது உடல் ஒரு நாள் யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும், அதன் பிறகு 2 நாட்களுக்கு மன்னாரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்படும்.?

இரு இடங்களிலும் நடக்கும்இறுதிச் சடங்குகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செயற்படுத்துமாறு திரு.ஜஸ்வர் தனது உப. தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ?

இறுதியாக தேசிய அணியினர் பெட்டகானையிலிருந்து மன்னார் வரை சென்று அன்பான டக்சனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு போக்குவரத்து ஏற்பாடுகளை தலைவர் பணித்தார்.?

அன்புள்ள எமது தலைவருக்கு, இந்த சோகமான தருணத்தில் தேசிய அணி மற்றும் டக்சனின் குடும்பத்துடன் ஆறுதலாக இருந்ததற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ?????

#Salam Jasmeen