டக் அவுட்டில் சாதனைப் படைத்த விராட் கோலி ..!

டக் அவுட்டில் சாதனைப் படைத்த விராட் கோலி ..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான விராட் கோலி வசம் ஏராளமான உலக சாதனைகள் இருக்கின்றன.

நவீன கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் விராட் கோலி அண்மைக் காலமாக துடுப்பாட்டத்தில் கொஞ்சம் சொதப்பி வருகிறார்.

தென் ஆபிரிக்க மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2வது போட்டியில் கோலி டக் வுட் முறை மூலமாக ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் கோலி விரும்பத்தகாத ஒரு புதிய சாதனைப் பட்டியலில் இணைந்து கொண்டார், 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து அதற்குப் பின்னரான காலகட்டங்களில் சர்வதேச ரீதியில் அதிக Duck Out களை சந்தித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்பதே அந்த சாதனையாகும்.

31 தடவை கோலி டக் அவுட் முறை மூலமாக ஆட்டம் இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2008 அறிமுகமான கோலி, மொத்தம் 70 சர்வதேச சதங்களை இதுவரை விளாசியுள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.