டன்னி இங்ஸ் இன் மெய்சிலிர்க்க வைக்கும் அபார கோல் – வெற்றி பெற்றது அஸ்டன் வில்லா..!

டன்னி இங்ஸ் இன் மெய்சிலிர்க்க வைக்கும் அபார கோல் – வெற்றி பெற்றது அஸ்டன் வில்லா..!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் இப்போது களைகட்ட ஆரம்பித்ததுள்ளன.

நேற்று இடம்பெற்ற இந்த வாரத்திற்கான போட்டியில் Newcastle United கழகத்தை Aston villa 2-0 என அபார வெற்றி கொண்டது.

டன்னி இங்ஸ் உடைய மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதமான கோல் அணியை 45 வது நிமிடத்தில் முன்னிலைப்படுத்த உதவியது, பின்னர் மேலும் ஒரு கோல் பெற்று ஆஸ்டன் வில்லா போட்டியை 2-0 என்கின்ற அடிப்படையில் வெற்றிகொண்டது.

டன்னி இங்ஸ் உடைய அற்புதமான கோல் இந்தப் பருவகாலத்தின் மிகச்சிறந்த கோலாக அமையும் எனும் நம்பிக்கையை கால்பந்து ரசிகர்களுக்கு உருவாக்கியுள்ளது.

சவுத்தம்டன் கழகத்திற்காக கடந்த பருவத்தில் விளையாடிய டன்னி இங்ஸ்  25 மில்லியன் யூரோவிற்கு ஆஸ்டன் வில்லா கழகத்திற்கு இம்முறை ஒப்பந்தமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

அவருடைய கலக்கல் ஆரம்பத்தைக் டன்னி இங்ஸ் ஆரம்பித்திருக்கிறார் என கால்பந்து ரசிகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.

Video ???