டாட்டெநேம் ( Tottenham) கழகம் பார்சிலோனாவின் பிரபல வீரரை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது ..!

டோட்டன்ஹாம் ( Tottenham) கழகம் பார்சிலோனாவின் பிரபல வீரரை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது ..!

கால்பந்து உலகில் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஒன்றாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முக்கியமான பரிமாற்று நடவடிக்கையாக பார்சிலோனா கழகத்திலிருந்து 22 வயதான ராயல் எமர்ஸன் எனும் இளம் வீரரை டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ( Tottenham) கழகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

லா லிகா போட்டிகளில் இருந்து ,இப்போது இந்த வீரர் இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு மாற்றலாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசிலின் 22 வயதான இந்த வீரரை இங்கிலாந்தின் பிரபலமான கால்பந்து கழகமான  டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ( Tottenham) ஐந்து ஆண்டுகளுக்கு பரிமாற்றி ஒப்பந்தத்தின் மூலமாக அணிக்கு கொண்டு வந்திருக்கிறது.

 

டோட்டன்நாமின் உள்வரும் பரிமாற்று வணிகம் மூலமாக Lautaro Martinez, Dusan Vlahovic, Houssem Aauar, Weston McKinnie, மற்றும் ரோயல் எமர்ஸனும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.