“டிரஸ்ஸிங் ரூமிலிருந்து சிக்னல்கள் அனுப்பப்பட்டால், மைதானத்தில் ஒரு கேப்டனின் பங்கு என்ன? -ஷானக என்ன செய்கிறார் ?

பங்களாதேஷுக்கு எதிரான முக்கியமான ஆசியக் கோப்பை 2022 ஆட்டத்தில் தங்கள் வீரர்களுக்கு தகவல்களை அனுப்ப குறியீடுகளை (code words) பயன்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்சியாளரது நடவடிக்கை பேசுபொருளாகியுள்ளது.

தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட், இலங்கையின் கேப்டன் மற்றும் அவரது வீரர்களுக்கு குறியீட்டு செய்திகளை அனுப்புவதை இன்றும் காண முடிந்தது.

 

குறியீடுகள் “2D” மற்றும் “D5” என்று காணப்பட்டது, 2020 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 தொடரில் இங்கிலாந்தின் பயிற்சியாளராக இருந்தபோது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து குறியீட்டு இவ்வாறே செய்திகளை பயன்படுத்தியதை இப்போதும் பின்தொடர்ந்ததாகத் தெரிகிறது.

இந்த நடைமுறையை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்தாலும், அப்போதைய கேப்டன் மோர்கன் அதன் பயன்பாட்டை ஆதரித்தார், அதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.

 

“டிரஸ்ஸிங் ரூமிலிருந்து சிக்னல்கள் அனுப்பப்பட்டால், மைதானத்தில் ஒரு கேப்டனின் பங்கு என்ன? கிரிக்கெட் என்பது கால்பந்து அல்ல,” என்று இலங்கை பயிற்சியாளர்கள் தங்கள் வீரர்களுக்கு செய்திகளை அனுப்பியது பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எமது YouTube தளத்துக்கு ?