டி வில்லியர்ஸ் படைத்துள்ள புதிய சாதனை..!

IPL போட்டிகளில் பெங்களூர் அணிக்காக விளையாடிவரும் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி நாயகனான டி வில்லியர்ஸ் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இன்றைய டெல்லி அணியுடனான போட்டியின் போது IPL போட்டிகளில் 5000 ஓட்டங்களைக் கடந்தவர் எனும் சாதனைக்கு சொந்தக்காரரான 6 வது வீரரானார்,

ரெய்னா, கோஹ்லி, ரோகித் சர்மா, டேவிட் வோர்னர் , தவான் ஆகிய வீரர்களை அடுத்து டீ வில்லியர்ஸ் இந்த பட்டியலில் இணைத்துள்ளார்.

அத்துடன் மிக குறைந்த பந்துகளில் இந்த சாதனையைப் படைத்தவராகவும் வில்லியர்ஸ் திகழ்கின்றார்.

3288 பந்துகள் : டீ வில்லியர்ஸ்
3555 பந்துகள்: வோர்னர்
3615 பந்துகள்: ரெய்னா
3817 பந்துகள்: ரோஹித் சர்மா
3824 பந்துகள்: கோஹ்லி
3956 பந்துகள்: தவான்

இன்றைய போட்டியில் ஆட்டம் இழக்காது 42 பந்துகளில் 75 ஓட்டங்களை வில்லியர்ஸ் அதிரடியாகப் பெற்றுக்கொடுக்க டெல்லி அணிக்கு 172 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு ஆடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது, இதன்முலமாக RCB அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.