டி 20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய முதல் அணி…!

டி 20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய முதல் அணி…!

2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பையின் முதல் சுற்று குழு பி யில் விளையாடிய பப்புவா நியூ கினியா அணி துரதிருஷ்டவசமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் முதல் அணியாக மாறியுள்ளது.

ஓமான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடன் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த பின்னர் டி 20 உலகக் கோப்பையிலிருந்து விலக வேண்டியேற்பட்டது.

இதேநேரம் அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2022 ஐசிசி டி 20 உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் அடுத்தாண்டும் பப்புவா நியூ கினியா அணிக்கு கிட்டவுள்ளது.

அதன்படி, 2022 ஐசிசி டி 20 உலகக் கோப்பையின் உலகளாவிய தகுதி போட்டியில் விளையாடும் 16 நாடுகள் விபரம்.

1. பப்புவா நியூ கினியா
2. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
3. நேபாளம்
4. ஜிம்பாப்வே
5. சிங்கப்பூர்
6. பிலிப்பைன்ஸ்
7. ஹாங்காங்

மேற்குறிப்பிட்ட 7 நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன மேலும் 9 நாடுகள் தகுதி பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை எதிர்த்தாடிய ஸ்கொட்லாந்து அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை ஸ்கொட்லாந்து அணி பெற்றுக்கொண்டது.

பெரிங்ரன் 49 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுச் சேர்த்தார்.

166 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி 19.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன்படி ஸ்கொட்லாந்து அணி 17 ஓட்டங்களினால் இலகு வெற்றியைத் தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.