டி20 உலககோப்பையில் இருந்து விராட் கோலி நீக்கப்பட வாய்ப்பு.. வைரலாகும் செய்தி – உண்மை என்ன?

டி20 உலககோப்பையில் இருந்து விராட் கோலி நீக்கப்பட வாய்ப்பு.. வைரலாகும் செய்தி – உண்மை என்ன?

ஐசிசி-யின் 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

முதல் முறையாக அமெரிக்காவில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் இந்த தொடரினை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் 29 நாட்கள் நடைபெறும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்த வேளையில் அதில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன.

அமெரிக்காவில் உலகக் கோப்பை தொடரானது நடைபெற இருப்பதால் கிரிக்கெட்டின் மீதான கவனம் அமெரிக்க நாட்டிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக உலகில் உள்ள பல முன்னணி வீரர்கள் இந்த உலகக்கோப்பை தொடரில் இடம் பிடித்து விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படவும் வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் தற்போது அதிகளவில் பரவி வருகிறது. அதற்கு காரணம் யாதெனில் : இம்முறை டி20 போட்டிகளானது உகாண்டா நாட்டிலும் நடைபெற இருக்கிறது. அதோடு மேற்கிந்திய தீவுகள் மைதானம் விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்பதும் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு டி20 போட்டிகளில் இனி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அணித்தேர்வு செய்யப்படும் என்பதாலும் விராட் கோலி நீக்கப்படவும் வாய்ப்பு இருக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதோடு டி20 உலக கோப்பை தொடர் முதல்முறையாக அமெரிக்காவில் நடைபெறவுள்ள வேளையில் அமெரிக்காவில் கிரிக்கெட் வளர வேண்டும் என்று விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் விளையாட வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் நினைக்கிறது.

அதோடு இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாகவே விராட் கோலியின் புகைப்படங்களை எல்லாம் அவர்கள் வெளியிட்டு அந்த தொடரை விளம்பரப்படுத்தி வருவதால் நிச்சயம் விராட் கோலி பங்கேற்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.