டி20 உலகக்கோப்பை: பிளாக் லிவ்ஸ் மெட்டர் இயக்கத்திற்கு மண்டியிட்டு ஆதரவு தெரிவித்த டி காக்!

டி20 உலகக்கோப்பை: பிளாக் லிவ்ஸ் மெட்டர் இயக்கத்திற்கு மண்டியிட்டு ஆதரவு தெரிவித்த டி காக்!

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நேற்றைய தினம் தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகள் விளையாடிய போட்டி . ஷார்ஜாவில் நடைபெற்றது இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் ஆப்பிரிக்க அணியில் கிளாசென்னுக்குப் பதிலாக டி காக் இடம்பெற்றுள்ளார். இலங்கை அணியில் மாற்றம் எதுவுமில்லை.

இந்நிலையில் பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் டி காக் விலகினார். இதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எனினும் தன்னுடைய நிலையை விளக்கிய டி காக், தென்னாப்பிரிக்க அணியில் மீண்டும் விளையாடவுள்ளதாக அறிவித்தார்.

இன்றைய ஆட்டத்தில் அனைவருடைய கவனமும் டி காக்கின் மீது இருந்தது. பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்துக்கு எந்த விதத்தில் தனது ஆதரவை வெளிப்படுத்துவார் என்று. இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கும் முன்பு, மற்ற வீரர்களுடன் இணைந்து மண்டியிட்டு, தனது ஆதரவை டி காக் வெளிப்படுத்தினார்.

#ABDH