டி20 உலகக்கோப்பை: புதியா சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசன்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே டாப் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் மோத உள்ள நிலையில் தகுதி சுற்று போட்டிகள் தற்போது ஓமன் நாட்டில் நடைபெற்று வருகின்றன.
இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் வங்கதேசம் அணி தற்போது இரண்டு வெற்றிகளை பெற்று சூப்பர் 12-ல் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வஙக்தேச அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டி20 உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
மேலும் உலக கோப்பை டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி வைத்திருந்த முக்கிய சாதனை ஒன்றினை அவர் பப்புவா நியூ கினியா நாட்டு அணிக்கு எதிரான போட்டியின் மூலம் முறியடித்துள்ளார். வங்கதேச அணிக்காக பல ஆண்டாக விளையாடி வரும் ஷாகிப் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
இதுவரை டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடி 39 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார். இந்நிலையில் அவரது இந்த சாதனையை முறியடித்துள்ள ஷாகிப் 28 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
#ABDH