டி20 உலகக்கோப்பை: முஜீப், ரஷித் அபாரம்; 130 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கான் வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் – ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 190 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா ஸத்ரான் 59 ரன்களையும், குர்பாஸ் 46 ரன்களையும், ஹஸ்ரதுல்லா ஸஸாய் 44 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணி முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதில் முஜீப் உர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனால் 10.2 ஓவர்களிலேயே ஸ்காட்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி, நடப்பு சீசன் டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முஜீப் உர் ரஹ்மான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
#ABDH