டி20 உலகக் கிண்ண போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி..!

டி20 உலகக் கிண்ண போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி..!

டி20 உலகக்கிண்ணப் போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன, பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டியில் விராட் கோலி 57 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவின் ஓட்ட அதிகரிப்புக்கு காரணமாக திகழ்ந்தார்.

நேற்றைய விராட் கோலியின் அரைச்சதம் அவருடைய பத்தாவது அரைச்சதமாக அமைந்தது, மொத்தமாக 17 T20 உலக கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 131 எனும் ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் 17 போட்டிகளில் 10அரைச் சதங்கள் விளாசியுள்ளார்.

இவருடைய சராசரி 83 ஐ கடந்து இருக்கிறது, இது மாத்திரமல்லாமல் T20 உலகக்கிண்ண போட்டிகளில் அதிக அரை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை நேற்று கோலி வசமானது.

இதுவரையில் கெயில் மற்றும் கோலி ஆகியோர் 9 அரைச் சதங்கள் விளாசி உள்ள நிலையில், நேற்று கோலி 10 வது அரை சதத்தையும் விளாசி உலக டுவென்டி டுவென்டி போட்டிகளில் அதிக அரைச் சதம் விளாசிய வீரர் எனும் உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

விராட் கோலி – 10
கிறிஸ் கெய்ல் -9
மஹேல ஜெயவர்தன – 7
திலகரத்ன தில்ஷான் – 6
ரோஹித் சர்மா – 6

ஆகியோர் அதிக அரைச்சதம் விளாசிய வீர்ர்களாக உள்ளனர்.