டெத் ஓவர்களில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் விபரம் தோனி அசைக்க முடியாத முதலிடத்தில் …!
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் பதினைந்தாவது அத்தியாயம் இடம்பெற்று வருகின்றது, இந்தியன் பிரிமியர் லீக் போட்டி தொடரில் ஒவ்வொரு நாளும் சர்ச்சைகளும் சுவாரஸ்யங்களும் நிறைந்ததாகவே போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் Death Overs என்று அழைக்கப்படுகின்ற இறுதி ஓவர்களில் அதாவது 16 தொடக்கம் 20 ஓவர்களில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியல் கிடைத்தது.
இந்த பட்டியலில் மஹேந்திர சிங் தோனி 148 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
அவருக்கு அடுத்த நிலையில் பொல்லார்ட் (126), டி வில்லியேர்ஸ் (112), ரோகித் சர்மா (78) , பாண்டியா (71) ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.